ETV Bharat / state

மர்மப் பொருள் வெடித்து சாமியார் உயிரிழப்பு! - saamyer dead in thiruvallur

திருவள்ளூர் : இறையாமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் சாமியார் கோவிந்தராஜ். இவர் தனது வீட்டில் மாலை பூஜையில் ஈடுபட்டிருந்த போது மர்ம வெடிகுண்டு வெடித்து உயிரிழந்துள்ளார்.

saamyer-dead-in-thiruvallur
author img

By

Published : Sep 26, 2019, 10:23 AM IST

திருவள்ளூர் அடுத்த இறையாமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் சாமியார் கோவிந்தராஜ். இவர் சித்த வைத்தியமும்,ஜோதிடமும் தெரிந்தவர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண் சிஷ்யை, கோவிந்தராஜ் வீட்டில் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் மாலை கோவிந்தராஜ் பூஜை செய்து கொண்டிருந்த போது திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அப்போது பக்கத்து அறையில் இருந்த லாவண்யா ஓடி வந்து பார்த்த போது, பலத்த தீக்காயங்களுடன் கோவிந்தராஜ் வீட்டிற்கு வெளியே ஓடி சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்றவர்கள் தீக்காயங்களோடு போராடிக் கொண்டிருந்தது குறித்து மப்பேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடலில் தீ்பிடித்து துடித்துக் கொண்டிருந்த கோவிந்தராஜை காரில் ஏற்ற முயன்ற போது மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

மர்மப் பொருள் வெடித்து சாமியார் துடிதுடித்து உயிரிழப்பு!

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் குமார் தீ விபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தால் சாமியார் உயிரிழந்த சம்பவம் தற்செயலாக நடைபெற்றதா, வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : வேலூரில் வெடித்த மர்மப் பொருள்? - நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த தம்பதி

Intro:
திருவள்ளூர் அருகே மர்மப் பொருள் வெடித்து சாமியார் துடிதுடித்து பலியான சோகம்: பூஜையில் கலந்துகொண்ட சென்னையைச் சேர்ந்த பெண் எந்தவித தீக்காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அதிசயம்: பிரேதத்தைக் கைப்பற்றி மப்பேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை :

Body:

திருவள்ளூர் அடுத்த இறையாமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் சாமியார் கோவிந்தராஜ்.சித்த வைத்தியம்,ஜோதிடமும் தெரிந்தவர். சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு ஏக்கர் இடம் வாங்கி அதில் ஒரு வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார். தாய் சென்னை நங்கநல்லூரில் இருக்க, சாமியார் கோவிந்தராஜ் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இங்கு தனியாக தங்கியுள்ளார். இவர் சித்தவைத்தியம் , ஜோதிடம், சம்பிரதாய பூஜை செய்வது யோகா என பல்வேறு வித்தைகளை செய்து வந்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் இருந்த போது கோவிந்தராஜை குருவாக ஏற்றுக் கொண்டு அவர் சொல்லும் பணிகளை ஒரு சிலர் செய்து வந்துள்ளனர். அதே போல் திருவள்ளூர் அடுத்த இறையாமங்கலம் பகுதியில் வந்த போது சென்னையிலிருந்து சிலர் அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. . இந்நிலையில் கடந்த சனிக்கிழமை லாவண்யா என்ற பெண் கோவிந்தராஜ் வீட்டில் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று மாலை பூஜை செய்து கொண்டிருந்த போது திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அப்போது பக்கத்து அறையில் இருந்ததாக கூறப்படும் லாவண்யா ஓடி வந்து பார்த்த போது பலத்த தீக்காயங்களுடன் கோவிந்தராஜ் வீட்டின் வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் தீக்காயங்களோடு போராடிக் கொண்டிருந்தது குறித்து மப்பேடு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடலில் தீ்பிடித்து துடித்துக் கொண்டிருந்த கோவிந்தராஜை காரில் ஏற்ற முயன்ற போது மயங்கி விழுந்து இறந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் குமார் தீவிபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சித்த வைத்தியம் பார்ப்பது, ஜோதிடம் பார்ப்பது, பூஜை செய்வது யோகா கற்றுத் தருவது என பல்வேறு வேலைகளை செய்து வந்த கோவிந்தராஜ் தான் தங்கியிருக்கும் வீட்டின் பத்திரத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நங்கநல்லூரில் உள்ள தாயிடம் கொடுத்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண் சிஷ்யை வந்து தங்கியதும், கோவிந்தராஜ் இன்று மாலை பூஜை செய்து கொண்டிருந்த போது வீட்டின் மற்றொரு அறையில் தான் சென்ற போது இந்த தீவிபத்து ஏற்பட்டு வெடித்ததில் கோவிந்தராஜ் உடலில் தீபிடித்ததாகவும் காவல் துறையினரின் விசாரணையின் போது லாவண்யா தெரிவித்துள்ளார். இந்த மர்மமான முறையில் ஏற்பட்ட தீவிபத்தால் சாமியார் பலியான சம்பவம் தற்செயலாக நடைபெற்றதா... அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.