திருவள்ளூர்: காக்களூரில் உள்ள பூந்தோட்டம் நகரில் வசித்து வருபவர்கள் ஆறுமுகம் (74) - பானுமதி (66) தம்பதியினர். இவர்கள் தங்களது மகள் மற்றும் மகன்னுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு, வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 22ஆம் தேதி அன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்காக ஆவடிக்கு சென்றுள்ளனர். அங்கு தங்களது மகள் வீட்டில் தங்கி இருந்துவிட்டு நேற்று முன்தினம் (ஜன.26) மாலை வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் நகை பணம் திருட்டு - இளைஞர் கைது