தமிழ்நாட்டில் வங்கிகள் மற்றும் ரயில்வே துறையில் அதிகளவில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மூன்று பேர் அரக்கோணம்-திருவள்ளூர் இடையே மணவூர் ரயில் நிலையத்தில் அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாலங்காடு காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் மறியலை தடுத்து நிறுத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இச்சம்பவத்தால் அரக்கோணம்-சென்னை இடையே சுமார் 20 நிமிடம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.