ETV Bharat / state

சாலைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்!

author img

By

Published : Aug 12, 2020, 2:16 PM IST

திருவள்ளூர்: பொன்னேரியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வீடுகளில் கறுப்புகொடி கட்டி சாலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

public protest by holding a funeral for the damaged road

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு இயலாமல் உள்ளது.

மேலும், 14ஆவது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் தெருவில் சிறிய மழைக்கே சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. பல மாதங்களாக இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கறுப்புகொடி கட்டி சாலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, “அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ, சிலிண்டர் வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் தங்களது சாலைக்குள் வரமுடியாத அவலநிலை இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், நடந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்காவிடில் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்” எனவும் எச்சரித்தனர்.

சாலைக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.