பொதுமக்கள் அனைவரும் இன்று(டிச.31) இரவு புத்தாண்டு தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட காத்திருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில், அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழுமி கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால், கரோனா தொற்றால் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஆயிரத்தும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேவையில்லாமல் சாலையில் சுற்றுபவர்கள் மீது காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனை மீறி செயல்படுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு