திருவண்ணாமலையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் குன்றத்தூர் சின்ன தெருவில் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் டெலிவரி பாயாக பணிபுரிகிறார்..
இவர், நேற்றிரவு வேலை முடிந்து பூந்தமல்லியையடுத்த நசரத்பேட்டையிலிருந்து வசூலான பணம் 31ஆயிரம் ரூபாயை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாகியுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த திருநங்கைகள் இருவர் அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பார்த்திபன் பாக்கெட்டில் இருந்து சில்லரை காசுகளை எடுக்கும்போது அவர் பாக்கெட்டில் அதிக பணம் இருப்பதை அறிந்து அவரை தாக்கி அவரிடம் இருந்த 31 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு திருநங்கைகள் இருவரும் ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து நசரத்பேட்டை காவல்நிலையத்தில் பார்த்திபன் புகாரளித்தார். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பார்த்திபனிடமிருந்து பணத்தை பறித்துச்சென்றவர்கள் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த நதியா(25) மற்றும் நந்தினி(30) என்பதும், இவர்கள் திருநின்றவூரில் பதுங்கியிருப்பதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து திருநின்றவூர் விரைந்த காவலர்கள் திருநங்கைகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'நான் மாணவிகளை குழந்தையாக பார்த்து வருகிறேன்' - நீதிபதி முன்பு மயங்கி விழுந்த நிர்மலா தேவி!