திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணை மீண்டும் கட்டப்படுகிறது. இதனை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பொன்னேரி உலகநாத அரசினர் கலைக்கல்லூரியில் சுமார் 11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கல்லூரி கட்டிடப் பணிகளை அவர் பார்வையிட்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க அலுவலர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், பொன்னேரி பேரூராட்சியின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து துரை சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். கரோனா தடுப்பு பணிகள் குறித்து பேரூராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.