திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வரதராஜபுரம் ராகவா நகரைச்சேர்ந்த தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அலெக்ஸ் பாண்டியன்(39), கடந்த 13ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று இன்று (ஆக.17) திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் பின்பக்க கதவை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டினுள் நுழைந்து பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகை, இரண்டரை கிலோ வெள்ளி, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து அலெக்ஸ்பாண்டியன் திருவள்ளூர் டவுன் போலீசாரிடம் கொடுத்தப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிலை வாங்குவது போல் நடித்து சிலை திருடர்களை பிடித்த காவல்துறையினர்