ETV Bharat / state

சாலையில் தலை தனியாக உடல் தனியாக கிடந்த இளைஞர்.. பொன்னேரி பகீர் சம்பவம்! - Ponneri murder case

Tiruvallur rowdy murder case: பொன்னேரி அருகே இளைஞர் ஒருவர் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், தலை தனியாக உடல் தனியாக துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tiruvallur rowdy murder case
பொன்னேரி அருகே சாலையில் தலை தனியாக உடல் தனியாக கிடந்த இளைஞரின் சடலம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 11:13 AM IST

திருவள்ளூர்: பொன்னேரி அருகே மெதூர் ஊராட்சி மன்றம், பழவேற்காடு சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டர்.

அந்த விசாரணையில், 'இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் வந்ததாகவும், கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த 28 வயது இளைஞரை, மற்ற 3 நபர்கள் வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு, பின்னர் அந்த இளைஞரை மற்ற நபர்கள் சேர்ந்து ஆயுதத்தால் வெட்டியதாகவும், அதில் தலை தனியாக உடல் தனியாக விழுந்ததாகவும், பின்னர் அந்த இளைஞரின் தலையை காலால் உதைத்து சாலையில் தள்ளிவிட்டுவிட்டு, 3 நபர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும்' கூறப்படுகிறது.

மேலும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதாகவும், அவரை கொலை செய்தது யார்? எந்த காரணத்திற்காக கொலை நடந்தது? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கைகள் கட்டப்பட்ட நிலையில், தலை தனியாகவும் உடல் தனியாகவும் கிடந்த சடலத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: காவல் துறையில் சங்கம் அமைக்க வலியுறுத்தி வீடியோ வெளியிட்ட காவலருக்கு கட்டாய பணி ஓய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.