திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் தொகுதியில் நேற்று காலை புள்ளிமான் ஒன்று நுழைந்தது. அந்தப் புள்ளிமானைக் கண்ட தெரு நாய்கள் துரத்தி கடிக்க முயற்சிசெய்தன. இதில் மிரண்டுபோன புள்ளிமான் ஆபத்திலிருந்து தப்பிக்கு ஓடத் தொடங்கியது.
இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நாய்களை விரட்டிவிட்டு புள்ளிமானை மீட்டனர். பின்னர் அதனைக் கடம்பத்தூர் விநாயகர் கோயில் அருகே கட்டிவைத்து வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் வனத் துறை அலுவலர் கலைவேந்தன் தலைமையில் வனக்காப்பாளர்கள் ஜானகிராமன், ராமமூர்த்தி ஆகியோர் புள்ளிமானை மீட்டு விலங்கியல் மருத்துவமனையில் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த மானை மீட்டு பூண்டி வனப்பகுதியில் விட்டனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை!