திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. இதில், திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், இஸ்லாமியர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் பங்குபெற்றவர்கள் அனைவரும் இணைந்து 300 அடி நீளமுள்ள தேசியக் கொடியைப் பிடித்தவாறு சென்றனர்.
செங்குன்றம் காந்தி சிலையருகே தொடங்கிய பேரணி பேருந்து நிலையம் வழியாக சென்று பாடியநல்லூர் பகுதியில் நிறைவடைந்தது.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை காட்டினர். இந்தப் பேரணியில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 'அமைச்சர் இதுபோன்று பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' - தமிமுன் அன்சாரி