திருவள்ளூர் மாவட்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதி, நெல்லூர் வரையிலான வழித்தடங்களில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பதினொன்று குளிர்சாதனப் பேருந்துகள், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பென்ஜமின், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் இணைந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர்கள், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உள்ளிட்டோர் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட அலுவலகம் வரை, புதிதாகத் தொடங்கி வைக்கப்பட்ட சொகுசு பேருந்தில் பயணச்சீட்டு எடுத்துப் பயணம் மேற்கொண்டனர்.
பேருந்துகள் குறித்து அமைச்சர் பென்ஜமின் கூறுகையில், 'இப்பேருந்துகளின் இயக்கம் பொது மக்களுக்கு பெரிதும் பயன்படும். குறிப்பாக திருப்பதி திருமலை தரிசனத்திற்குச் செல்வோரும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்' என கூறினார்.
மேலும், இப்பேருந்தில் செல்ஃபோன் சார்ஜ் செய்யும் வசதி, தனியார் பேருந்தில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அவை அனைத்தும் இப்பேருந்தில் இருக்கிறது என அவர் கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ரூ.380 கோடி செலவில் புதிய விமான முனையம்!