திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் இன்று காலை முதலே இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.
கும்மிடிப்பூண்டியில் பலத்த மழை நீடிக்கிறது. இந்த மழையினால் குடிமராமத்துப் பணி செய்யப்பட்ட ஏரிகளின் தண்ணீர் அளவு உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, மேலும் போக்குவரத்து பாதிப்பால் அலுவலகத்துக்கு செல்லக்கூடியவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து மழை நீடித்தால் குடிநீர் பிரச்னை தீரும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.