திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியை ஏலம்விடும் நிகழ்வு பொதுப்பணித் துறை சார்பில் நடைபெற்றது.
ஏரியில் மீன் வளர்க்க ஏதுவாக இந்த ஏலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று (ஆக. 25) நடைபெற்ற ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விதித்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பலரும் கலந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் ஏரியை ஏலம் எடுப்பதில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. தகவலறிந்து வந்த கனகம்மாசத்திரம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதையும் படிங்க: ஏரி சீரமைப்பு பணிக்கு முட்டுக்கட்டையிடும் திமுக பிரமுகர்கள்!