ETV Bharat / state

லாரி மோதி இருவர் உயிரிழப்பு: உடல்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற அவலம்!

திருவள்ளூர்: இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

Lorry
Lorry
author img

By

Published : Feb 14, 2021, 9:02 AM IST

திருவள்ளூர் அரசு தலைமை தபால் நிலையம் அருகே திருவள்ளூர் புங்கத்தார் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் செல்வராஜ் (28), பத்தியால்பேட்டை ஏழுமலை என்பவரது மகன் அஜித் (25) இருவரும் கட்டிட சம்பந்தப்பட்ட வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களது இருசக்கர வாகனத்தை முந்தி சென்ற மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது.

Lorry
உயிரிழந்த செல்வராஜ்

இதில் செல்வராஜ், அஜித் இருவரும் சுமார் நூறு மீட்டர் அளவிற்கு இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் இருவரும் உயிரிழந்ததை அறிந்து திரும்பிச் சென்றது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்த மினி சரக்கு வாகனத்தை மடக்கி இருவரின் உடலையும் அதில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Lorry
உயிரிழந்த அஜித்

சரக்கு வாகனத்தில் உடல்களை ஏற்றி சென்று சம்பவம் அங்கிருந்தவர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து நடைபெற்ற இடத்திற்கும் அரசு மருத்துவமனைக்கும் 500 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தும் உயிரிழந்த இருவரின் சடலத்தை எடுத்துச் செல்ல வாகனம் வராததால் உறவினர்கள் பொதுமக்கள் மிகுந்த கோபத்துக்கு ஆளானர்கள்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து: மக்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.