சென்னையின் முக்கிய வணிகஸ்தலமான கோயம்பேடு மார்க்கெட்டின் மூலம் கரோனா வைரஸ் தொற்று பரவல் பல மாநிலங்களுக்கு பரவியுள்ளது. இதனையடுத்து தற்போது கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து மார்க்கெட் திருமழிசையில் உள்ள துணைக்கோள் நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த திருமழிசை பேரூராட்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். சென்னையிலிருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த மார்க்கெட்டில், அனைத்து வகையான முன்னெச்சிரிக்கை ஏற்பாடுகளுடன் தயாராகிவருகிறது.
இதையும் படிங்க...மீண்டும் செயல்பட தொடங்கிய திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்!