திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கர்லம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(64). இவரது மகன் சந்திரபோஸ். இவருக்கும் திவ்யா என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி திவ்யா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது.
அதன் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக திவ்யாவின் கணவர் சந்திரபோஸ், மைத்துனர், மாமனார் பெருமாள் ஆகியோர் டிசம்பர் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டு திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, சிறையில் இருந்த பெருமாள் திடீரென மயக்கமடைந்தார்.
இதையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி இன்று (டிசம்பர் 20) பெருமாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.