திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சனி என்பவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி அகில இந்திய இந்து மகா சபா நிர்வாகி கோடம்பாக்கம் ஶ்ரீகண்டன் மீது பாலியல் புகார் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் புகார் கொடுத்தார்.
இந்தப் புகார் குறித்து ஸ்ரீகண்டனின் மனைவி நான்சி சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவரிடம் வேண்டுமென்றே 20 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு நான்சி பொய் புகார் அளித்து இருப்பதாகவும், அவரைப் பழி வாங்குவதற்காக இப்படியொரு புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது விமல் சந்த் என்பவர் தன்னிடம் ஸ்ரீகண்டன் என்பவர் பண மோசடி செய்ததாக கூறி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த இரண்டு புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படையினர் அமைத்து ஸ்ரீகண்டனை தேடி வந்தனர். நேற்று இரவு தலைமறைவாக இருந்த ஸ்ரீகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். அதற்கு பிறகு சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவரைத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.