ETV Bharat / state

அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு!

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அரசு பேருந்து மோதி, பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Government student killed in government bus collisionGovernment student killed in government bus collision
Government student killed in government bus collision
author img

By

Published : Sep 27, 2020, 9:55 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அரண்வாயில் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் சுல்தான் பாஷா-சபிரா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒவரான மீரான் உசேன்(12) அருகிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சிறுவன் மீது பழவேற்காடு நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாரத விதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என சிறுவனின் உறவினர்கள் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மீஞ்சுர் காவல்துறையினர், பேருந்து ஓட்டுநரை கைது செய்துனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவனின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

அரசு பேருந்து மோதி பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.