செங்குன்றம் சோதனைச்சாவடியில் சென்னை கொத்தவால்சாவடி காவல் ஆய்வாளர் அன்பரசு மற்றும் உதவி ஆய்வாளர், காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு பன்னிரண்டு முப்பது மணி அளவில் ஆந்திராவிலிருந்து செங்குன்றம் நோக்கி வேகமாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், ஆட்டோவில் வந்த திருவொற்றியூர் ராஜாகடை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ், 95 ஆவது பிளாக் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர் பார்வதி மற்றும் காசிமேடு சிங்கார வேலன் நகர் 2-வது தெருவை சேர்ந்த ஜெயசீலன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. இதேபோல் கடந்த 13ஆம் தேதி 42 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது!