திருவள்ளூர்: பழவேற்காட்டைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1500 மீனவர்கள், தங்களுக்கு அரசு அறிவித்தபடி, எல்.அண்ட்.டி. கப்பல் கட்டும் துறைமுகம், அதானி துறைமுகம் வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, எல்.அண்ட்.டி. துறைமுகத்தில் பணிபுரியும் 250 மீனவர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காததால் எல்.அண்ட்.டி. துறைமுக வாயில் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்தனர்.
பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரைசந்திரசேகர் ஆகியோர் மீனவர்கள் இடையே சமரசம் மேற்கொண்டும் உடன்பாடு எட்டப்படாததால், இன்று (ஜனவரி 31) ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுக வாயில் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்