திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே தனியார் நெகிழி மூலப்பொருள் கிடங்கில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூவிருந்தவல்லி தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் நெகிழி மூலப்பொருள்கள், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கணினி உட்பட 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.