திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய வகையில் உள்ள வீடுகள், கடைகள், நிறுவனங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தலைமையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி இன்று சி.வி.நாயுடு சாலையில் உள்ள கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அலுவலர்கள், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய வகையில் உள்ள வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
அதேபோல் ஜெயா நகரில் செய்த சோதனையில், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய வகையில் இருந்த வீடுகளுக்கு ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 63 பேருக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 700 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தெரிவித்தார்.
இதையும் படியுங்க: