ETV Bharat / state

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி போராட்டம்

திருவள்ளூர்: தனியார் தொழிற்சாலைக்கு நிலம் வழங்கிய உழவர்களின் குடும்பத்தினருக்கும், பணிநீக்கம்செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி விவசாயிகள்  போராட்டம்

author img

By

Published : Mar 31, 2021, 10:05 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட அதிகத்தூர் ஊராட்சியில் கார் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலை தற்போது ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு கைமாறியது.

இதனால், அங்கு பணியாற்றிவந்த நிலம் கொடுத்த உழவர்களின் குடும்பத்தினர் 22 பேர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 173 பேருக்கு வேலை தர மறுத்துவிட்டது.

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

இதனால், இந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில், இந்தத் தொழிற்சாலை ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு கைமாறினாலும் பணிநீக்கம்செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும், நிலம் வழங்கிய உழவர்களின் குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிற்சாலை முன்பாகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டுவந்த தொழிலாளர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஓய்வு பெற்றார் டிஜிபி சுனில்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.