ETV Bharat / state

96 சிசிடிவி கேமராக்களை தொடங்கிவைத்த காவல் கண்காணிப்பாளர் - thiruvallur

திருவள்ளூர்: உளுந்தை ஊராட்சியில் 96 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்துவைத்தார்.

thiruvallur
thiruvallur
author img

By

Published : Oct 9, 2020, 11:14 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட உளுந்தை ஊராட்சியில் தலைவராக இருப்பவர் ரமேஷ். இவர் தலைவராக பதவியேற்ற முதல் இன்றுவரை பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் ஊராட்சியில் மேற்கொண்டு வருகிறார். அதிலும் முக்கியமாக வைரஸ் தொற்று காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

இந்நிலையில், உளுந்தை ஊராட்சியில் திருட்டு, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊராட்சிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் 96 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார்.

இந்த கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது குற்றங்களைத் தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகிறோம். இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் முக்கியமான சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 10,000 கேமராக்களை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர அந்தந்த கிராம ஊராட்சி ஒன்றியங்களில் கேமராக்களை பொருத்த அந்த நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்திவருகிறோம். விரைவில் அனைத்து பகுதிகளிலும் கேமராக்களை பொருத்தி குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் அப்படி குற்றங்கள் நடைபெற்றால் அதை விரைவாக கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்வோம்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.