திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திலுள்ள கண்டிகைப் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் ஹேம்நாத் என்ற மாணவன், உலகப் பொதுமறையான திருக்குறளின் 1330 குறள்களையும், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் பார்க்காமல் ஒப்புவித்தார்.
சிறுவனில் திறனைக் கண்டு வியந்த மாவட்ட காவல் காண்காணிப்பாளர், சிறுவனை ஊக்குவிக்கும் வகையில் பரிசினை வழங்கி, வாழ்வில் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!