திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்துக்கு உட்பட்ட திருமழிசை துணைக்கோள் நகரம் பகுதியில் கோயம்பேட்டிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட தற்காலிக மொத்த காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சந்தைகள் தொடர் மழை காரணமாக சேதமடைந்த பகுதிகள் முழுமையாக சீர்செய்யப்பட்டு மற்ற பகுதிகளில் தரைப்பகுதி பாதைகளை மண்கொண்டு சீர்செய்து சமன்படுத்தி உறுதியான மற்றும் நிலையான சாலைகளை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
நகராட்சி சார்பாக நீர் உறிஞ்சும் இயந்திரங்கள், மின் மோட்டார்கள் உள்ளிட்டவை கொண்டு மழை நீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டார்.
சந்தையில் கொட்டப்படும் காய்கறி கழிவுகள், குப்பைகள் கழிவுகளை நகராட்சி, பேரூராட்சி வாயிலாக உடனுக்குடன் அப்புறப்படுத்தி தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள உத்தரவிட்டார். மேலும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்திய ஆட்சியர், நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தற்காலிக காய்கறி சந்தையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர்: திருமழிசை துணைக்கோள் நகரப்பகுதியில் உள்ள தற்காலிக மொத்த காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.