ETV Bharat / state

குற்றவாளிகளை எளிதாக கண்டறியும் ஃபேஸ்டாக்கர்: நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் பாராட்டு

author img

By

Published : Dec 10, 2020, 2:36 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

thiruvallur
thiruvallur

திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றவாளிகளை எளிதாக கண்டறியும் பேஸ்டாக்கர் எனும் மென்பொருளை உருவாக்கி குற்றம் செய்பவர்களை எளிதில் கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூரில் அமைதியை நிலை நாட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனை நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் நேரில் சந்தித்து பாராட்டினர். அப்போது, நகர செயலாளர் ஜெயபால்ராஜ் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணவாளன் நகரில் பழுதடைந்துள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும். மணவாளன் நகர், இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து உள்ளிட்ட எந்த பேருந்தும் நிற்காமல் செல்கிறது.

இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், காவல் துறை சார்பில் பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சத்தியமங்கலம் மாட்டுத் தீவன சோளத்தட்டு அறுவடை தீவிரம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.