திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருப்பாச்சூர் பெரியகாலனி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர்(31) ஆட்டோ ஓட்டுநராக இருந்துவந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இவரது குடிசை வீடு தீ பிடித்து எரியத்தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்த நாசமானது.
இந்த தீ விபத்தில், புதிய வீடு கட்டுவதற்காக சுதாகர் தனது ஆட்டோவை விற்று வைத்திருந்த பணம் ரூ.1.50 லட்சமும், புதிய வீட்டுமனைப் பத்திரமும் எரிந்து நாசமானது. மேலும், 5 சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி, குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் என அனைத்தும் எரிந்ததால் சுதாகர் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழப்பு