திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் பாமக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசுகையில், "கரோனா பெருஞ்சுமையை குறைக்கவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாயும், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் திட்டத்தையும் அறிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலினின் மக்களவைத் தேர்தல் வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். மு.க.ஸ்டாலின் மீது பெண்கள் கோபத்தில் உள்ளனர். மு.க.ஸ்டாலின் என்றாலே பொய் என்று தான் அர்த்தம்.
பழனிசாமி ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் பழனிசாமி. ஆனால், அதைத் தடுக்க சூழ்ச்சி செய்தவர் மு.க.ஸ்டாலின் தான். ஸ்டாலினின் கனவு பலிக்காது" என்றார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்பு வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு - அன்புமணி நம்பிக்கை