திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சிலம்பரசன். இவர் ஊரணம்பேடு புதிய வடசென்னை அனல் மின் நிலையம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இருந்து பணி முடித்து காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று மறைத்து வைத்த ஆயுதங்களால் சிலம்பரசனை வழிமறித்து சரமாரியாக வெட்டியது.
இதில் படுகாயமுற்ற சிலம்பரசன், மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அவரது உடலானது உடற்கூறாய்வு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் அவரது நண்பர் சரண்...!