திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு காவல் அதிரடிப் படையில் பணிபுரிந்து வருபவர், இளங்கோவன் (35). இவர் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்காக, திருவள்ளூர் சென்று வந்துகொண்டிருந்தார். அப்போது கூவம் பகுதியில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: பணியாள்களை ஏற்றிவந்த வேன் விபத்து: 19 பேர் படுகாயம்!