திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு ரேசன் அரிசி கடத்திச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியை வாங்கி ஆந்திராவிற்கு ஒரு கும்பல் கடத்திச்செல்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் ஆந்திராவிற்கு ரேசன் அரிசியை கடத்திச்சென்ற வாகனம் ஒன்று பெருவாயல் கிராமத்தில் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் வாகனத்திலிருந்த ரேசன் அரசி மூட்டைகள் சாலையில் சிதறியது. இதனால் ரேசன் அரிசியை கடத்த முயன்ற ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார்.
இது குறித்து தகவலறிந்த கவரைப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேசன் அரசியைப் பறிமுதல்செய்து உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ரேஷன் அரசி கடத்தலில் ஈடுபடுவோர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.