கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி, பள்ளிகள் திறக்கப்படாததால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி நீண்ட நாள்களாகப் பூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (அக். 20) மதியம் இப்பள்ளியிலிருந்து மடிக்கணினிகள், உபகரணங்கள் காணாமல்போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.