கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் பலசரக்கு கடைகள், அத்தியாவசிய பொருள்கள் விற்கும் கடைகளுக்கு காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டு வர்த்தகம் நடந்துவருகிறது. நெல்லை டவுன் மேலமாட வீதி, வடக்குரத வீதி, மேலரத வீதி ஆகிய பகுதிகளில் பலசரக்கு உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் மொத்த விற்பனை கடை செயல்பட்டுவருகிறது. இங்கிருந்துதான் மாவட்டம் முழுவதிற்கும் பொருள்கள் செல்கின்றன.
ந்நிலையில் தினமும் காலையில் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் பகுதிக்கு பொருள்கள் வாங்கிச் செல்வதற்காக அவர்கள் சொந்த லாரி, லோடு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வருவதால் மொத்த விற்பனை கடைப் பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
வாகனங்கள் அதிக அளவில் நிற்பதைக் கண்ட மாநகர காவல் துறை அந்த வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று கூறி 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதனால் மொத்த விற்பனை கடைகள் பாதிப்படைகின்றன. எனவே காவல் துறையின் செயலைக் கண்டித்து நேற்று 300 மொத்த விற்பனை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடுகு, சீரகம், பருப்பு வகைகள் கடந்த 12 நாள்களாக வரத்து இல்லாததால் இருப்புகளை வைத்து வியாபாரம் நடந்து வந்தது. தற்போது மொத்த விற்பனை கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகளின் வியாபாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உத்தரவு!