ETV Bharat / state

எனது அடையாளம் நளினமான ஆடையில் இல்லை - திருநங்கை முத்துமீனாட்சி - திருநெல்வேலி திருநங்கை முத்துமீனாட்சி

ஆண் யானையோட கம்பீரங்கிறது அதோட தந்தங்கள் தான். மகாபாரதங்கிற அமர காவியம் எழுத, அந்த கம்பீரத்தையே இழந்தார் விநாயகர். வியாசருக்காக தன் தந்தம் உடைச்சு பாரத புராணம் எழுதினார். நானும் அப்படி தான்; எனக்குள்ள உணர்ந்த பெண்மையின் அடையாளம், நளினமான ஆடையில இல்லைங்கிறதால, அதை ஆடல் கலை மூலமா வெளிப்படுத்துறேன் என தீர்க்கமாக தன் கதையைத் தொடங்குகிறார் திருநங்கை முத்துமீனாட்சி.

எனது அடையாளம்
எனது அடையாளம்
author img

By

Published : Oct 23, 2020, 6:45 PM IST

Updated : Oct 28, 2020, 6:59 AM IST

திருநெல்வேலி : பாண்டவர்களின் பன்னிரெண்டு ஆண்டு கால வனவாசம் முடிந்த நேரம். அடுத்து ஒரு வருடம் அடையாளம் துறந்த அஞ்ஞாத வாழ்வு வேண்டும். அர்ச்சுனன் தவிர்த்த நால்வர் தங்களுக்கு விருப்பமான தொழிலைத் தேர்வு செய்து தலைமறைவு வாழ்க்கைக்குத் தயாராக, அவர் மட்டும் பாரதப் போரின் லட்சியம் தவறாதிருக்க தன்னைத் திருநங்கையாக்கிக் கொண்டார். அழகு துறந்த அர்ச்சுனனின் அந்த முடிவுக்கு நிகராக, தன் பெண்மையின் அடையாளம் துறந்து, சாதித்து வருகிறார் திருநெல்வேலி பாலபாக்கியா நகரில் உள்ள திருநங்கை ஒருவர். பாலின அறுவை சிசிச்சை செய்து பெண்ணாய் மாறியிருந்தும், தன்னைப் பெண்ணாய் வெளிப்படுத்த பெண்கள் போல இவர் ஆடையணியாமல், ஆண் உடையிலேயே வலம் வருகிறார்.

"விழும்போது ஒரு விதையா விழுந்து, வளரும் போது வேற செடியா வளருற விதி எனக்கு. எல்லா திருநங்கைகள் மாதிரியும் பதின்ம வயசுல எனக்குள்ள வித்தியாசமான மாற்றத்தை உணர, உலகமே இருண்டு போனதா நினைச்சேன். இனி இது தான் வாழ்க்கைனு தெரிஞ்சதுக்கு பிறகு, என்னோட பெண் தன்மையை ஆடையில் அடையாளப்படுத்தக் கூடாதுனு முடிவு செஞ்சேன். அதனால தான் என் பெயரையும் இருபால் பெயரா வச்சிருக்கேன்" தன் பெயர் காரணத்தை விளக்குகிறார் திருநங்கையான முத்துமீனாட்சி.

பாலின மாற்றத்தை உணர்ந்த பிறகு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய முத்துமீனாட்சி, அதுவரை உடுத்தி வந்த ஆண் உடையிலேயே திருநங்கைகள் சங்கமிக்கும் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு சக திருநங்கைகளே இவரது தோற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல், இவரது ஆடைகுறித்து கேலி செய்யதிருக்கிறார்கள். அப்போதிருந்து தொடங்கியிருக்கிறது முத்துமீனாட்சியின் அடையாள ஆடை துறப்பு தீவிரம். பெண்மையின் அடையாளம் அவளுடுத்தும் ஆடையில் இல்லை என உணர்ந்தவரை, அள்ளி அரவணைத்துக் கொண்டது பரதக் கலை. அதனை முத்துமீனாட்சிக்கு தெளிவுற கற்பித்திருக்கிறார், குரு ஸ்ரீமதி ராஜேஸ்வரி சுந்தர்ராமன்.

muthumeenakshi
மாணவிகளுக்கு பரதம் கற்றுத்தரும் முத்துமீனாட்சி

எனக்குள் நிகழ்ந்த மனப்போராட்டங்களுக்கு எல்லாம் நாட்டியம் தான் ஆறுலாக இருந்தது. 16 வயதில் நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு முதலில் நாட்டியம் கற்றுக் கொடுத்தது குரு ஸ்ரீமதி ராஜேஸ்வரி சுந்தர்ராமன். பிறகு, திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குருவாக இருந்தவர் குரு ஸ்ரீ மதி செல்வமுத்துகுமாரி. இவர்கள் இருவரும் என் இரு கண்கள் எனக் குருவைப் பற்றி பேசும் போது நன்றியுணர்ச்சி இழையோடும் வார்த்தைகள். என் மனப்போராட்டங்களுக்கு எல்லாம் நாட்டியம் நல்ல வடிகாலாக இருந்தது, இருக்கிறது. நானாடும் நாட்டியம் என் பெண்மை உணர்வுகளுக்கும், நளினத்திற்கும், கலை ஆர்வத்திற்கு கிடைத்த விருந்தாக உணர்கிறேன் என்னும் போது உற்சாக ஆடையுடுத்திக் கொள்கிறது.

நீங்கள் ஏன் பெண்களைப் போல உடை உடுத்தவில்லை எனக் கேட்கிறார்கள். நான் இந்த சமூகத்தோடு கலந்து வாழ விரும்புகிறேன். எத்தனைத் திருத்தமாக பெண் உடை அணிந்திருந்தாலும் மக்களிடம் திருநங்கைள் குறித்த அச்சம் இன்னும் இருக்கு. அதனால அவங்களை தள்ளி தான் வைச்சிருக்காங்க. அதுக்காக பெண் உடை உடுத்தும் சக திருநங்கைத் தோழிகளை நான் தவறா சொல்லலை. உண்மையில் அப்படி வாழ்றது தான் கஷ்டம். எனக்கு கிடைச்ச சிறப்பான இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதா ஆக்கிக்க நினைச்சேன். என் பெண்மையோட அழகு அழிஞ்சி போறதா இல்லாம ஆக்கப்பூர்வமானதா இருக்கணும். சராசரி பெண்களே ஆணுடை, வெட்டித் திருத்திய சிகையோட இருக்கும் போது, நான் மட்டும் ஏன் பெண் உடைக்குள்ள ஒளிஞ்சுக்கணும். இந்த ஆண் உடை மக்களுக்கும் தடையாய் இல்லை; என் பெண்மைக்கும் தடையாய் இல்லை. எனக்கான அடையாளம் என் ஆடலிலும், குழந்தைகளுக்கு அதை சொல்லித் தருவதிலும் இருக்கிறது என தெளிவாகவும் திருத்தமாகவும் முடித்தார் முத்துமீனாட்சி.

திருநெல்வேலி பாலபாக்யா நகரில், ஸ்ரீராம் அகாமி என்ற பெயரில் பரத நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார் முத்துமீனாட்சி. தினமும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் இவரிடம் பரதம் கற்று வருகின்றனர். இது தவிர தனியார் கல்லூரிகளில் பரதநாட்டிய ஆசிரியராகவும் பணியாற்றி வரும் முத்துமீனாட்சி, இதுவரை 300க்கும் பெண்களுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்துள்ளார்.

எனது அடையாளம் நளினமான ஆடையில் இல்லை

உடல் சிவனாகவும் உள்ளம் சக்தியாவும் வி(தி)தைக்கப்பட்ட திருநங்கைகள் சராசரி அங்கீகாரத்திற்காக நடத்தும் அறப் போராட்டங்கள் அதிகம். மாற்றங்களை விதைத்து வரும் காலம், பால் மாறிவர்களையும் புதிய பாதைகளில் பயணப்பட வைக்கிறது. அங்கீகாரத்தை அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காமல், அதை தன்னுள் தேடிக் கண்டடையுங்கள் என சாதித்துக் காட்டியிருக்கும் முத்துமீனாட்சி, அனைவருக்குமான உதாரணமாய் இருக்கிறார்.

இதையும் படிங்க : கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கிறேன் - சிறுமியின் தளராத நம்பிக்கை

Last Updated : Oct 28, 2020, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.