ETV Bharat / state

தொடர் மழை எதிரொலி: 100 அடியை எட்டும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் - Manimuttaru Dam

திருநெல்வேலி: தொடர் மழை எதிரொலியாக மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது.

மணிமுத்தாறு அணை  மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம்  100 அடியை எட்டும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம்  The water level of Manimuttaru Dam reaches 100 feet  Manimuttaru Dam  Water level of Manimuttaru Dam
Manimuttaru Dam
author img

By

Published : Dec 7, 2020, 1:56 PM IST

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிய நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை நீடித்துவருவதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபாநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துவருகிறது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 145.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 584 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நீர் வெளியேற்றம் மழையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம், ஒரேநாளில் 3 அடி உயர்ந்து 158.78 அடியாக உள்ளது.

அதேபோல், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம், ஒரு அடி உயர்ந்து 98.35 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசம் அணைப்பகுதியில் 45 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணைப்பகுதியில் 32 மில்லி மீட்டரும் மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 67.40 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரத்தில் 22 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 36.40 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 1.50 மில்லி மீட்டரும், திருநெல்வேலியில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து கூடுதலாக 2,500 கனஅடி நீர் திறப்பு - தூத்துக்குடி ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.