ETV Bharat / state

வில்லுப்பாட்டில் கலக்கும் 2K kid - கிராமிய கலையைக் காக்கும் மாதவி - Villupattu madhavi reels

இப்போதும் இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல்வேறு சமூக வலைதளங்களிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு, வில்லுப்பாட்டு என்னும் கலையால் தென் தமிழ்நாட்டை ஆட்சி நடத்தி வரும் மாதவி கடந்து வந்த பாதையை காணலாம்.

‘இவள் தவறான வழியில் சென்று விடுவாள்..’ - வில்லுப்பாட்டு மாதவி கடந்து வந்த பாதை!

author img

By

Published : Feb 27, 2023, 5:37 PM IST

வில்லுப்பாட்டு கலையைக் காக்கும் மாதவி

திருநெல்வேலி: தென்தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கிராமியக் கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் முக்கிய கலையாக இருந்து வருகிறது. குறிப்பாக மதுரைக்கு தெற்கே, கோயில் திருவிழாக்களில் வில்லிசைப் பாட்டு தலைசிறந்த பக்தி நிகழ்ச்சியாக இருக்கிறது. கடவுளைப் போற்றிப் பாடும் இந்த வில்லிசைப்பாட்டிற்கு மயங்காத சாமிகளே இல்லை என்று கூறலாம்.

ஆடாத சாமிகளையும் கூட ஆடவைக்கும் வில்லிசை கலைக்கு, கிராமங்களில் அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. கோயில் கொடைகளில் பக்தி பரவசத்துடன் சாமி ஆடும் நபர்கள் மிக உரிமையோடும், குழந்தைத்தனத்தோடும் வில்லுப்பாட்டை ரசித்தபடி ஆடுவார்கள். ஆனால், காலப்போக்கில் கோயில் திருவிழாக்களில் பாட்டு கச்சேரி, செண்டை மேளம் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் போன்ற இசை நிகழ்ச்சிகளின் வரவால் கிராமியக் கலையான வில்லுப்பாட்டுக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது.

எனவே, சமீப காலமாக புதிதாக வில்லுப்பாட்டு கலையை கற்றுக்கொள்ள யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வில்லிசை என்னும் அற்புத கலை அழியும் விளிம்பில் இருக்கும் நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது 14 வயதில் வில்லுப்பாட்டு மீது ஏற்பட்ட அதீத காதல் காரணமாக அதை முறையாக கற்று, தற்போது முழு நேர வில்லுப்பாட்டு கலைஞராக உருவெடுத்து, அப்பகுதி மக்களுக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

ஆம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அச்சங்குன்றத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் - மாலதி தம்பதியின் மகள், மாதவி. மாதவியின் தந்தை கொத்தனார் வேலை செய்து வருகிறார். மாதவி சிறு வயதில் ரெட்டியார்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு கோயில் திருவிழாவுக்குச் செல்லும்போது, அங்கு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைக் கண்டு உணர்வுப்பூர்வமாக அதை ரசித்துள்ளார். பெரும்பாலும் வயதானவர்களே வில்லுப்பாட்டு கலையை அதிகம் ரசிப்பார்கள்.

ஆனால், மிகச்சிறிய வயதில் மாதவி, வில்லுப்பாட்டு கலையின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு தனது ஆழ்மனதில் பதிய வைத்துள்ளார். மாதவி 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவரது உறவினர் ஒருவர், நமது வீட்டில் யாராவது வில்லுப்பாட்டு படித்தால் நன்றாக இருக்கும் என ஒரு பேச்சுக்கு கூறியுள்ளார். ஏற்கனவே வில்லுப்பாட்டு மீது தீராத காதல் கொண்ட மாதவி, நாமே வில்லுப்பாட்டு கலையைக் கற்றுக் கொண்டால் என்ன என்று எண்ணி, தனது பெற்றோரிடம் விருப்பத்தைக் கூறியுள்ளார்.

சிறுமி என்பதாலும் பெண் என்பதாலும் முதலில் மாதவியின் ஆசைக்கு தடை போட்ட அவரது தந்தை, பின்னாளில் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தார். அதன்படி வில்லுப்பாட்டு கலையில் சிறந்து விளங்கும் மூத்த வில்லிசை கலைஞர்களிடம் முறைப்படி, வில்லுப்பாட்டு கற்க, தனது மகளை அனுப்பி வைத்தார்.

முதல் அரங்கேற்றம்: ஒருபுறம் கோயில் திருவிழாக்களுக்கு தவறாமல் சென்று, அங்கு நடைபெறும் வில்லிசைக் கச்சேரியின்போது குறிப்புகள் எடுத்துக் கொண்டு இரவு பகல் பாராமல் மாதவி வில்லிசையை முழு நேரமாக கற்கத் தொடங்கினார். மூத்த பக்க வாத்திய கலைஞர்களிடம் வில்லுப்பாட்டு குறித்த புத்தகங்களையும் வாங்கி ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினார்.

இதன் காரணமாக ஒரு சில மாதங்களில் கோயில் திருவிழாக்களில் தனியாகச் சென்று நிகழ்ச்சி நடத்தும் அளவுக்கு குழந்தைப் பருவத்திலேயே வில்லிசை கலைஞராக மாதவி உருவெடுத்தார். மாதவியின் முதல் அரங்கேற்றம் அவரது சொந்த ஊரான அச்சங்குன்றத்தில் உள்ள அம்மன் கோயிலில் அரங்கேறியது.

முதல் அரங்கேற்றம் செய்தபோது மாதவிக்கு 14 வயதுதான் ஆகியிருந்தது. தனது முதல் அரங்கேற்றத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பக்கத்து ஊர்களில் மாதவியை வில்லிசைப் பாட ஊர் மக்கள் அழைத்தனர். தொடர்ந்து உள்ளூர் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில், தற்போது வரை 4 ஆண்டுகளில் மாதவி 300-க்கும் மேற்பட்ட வில்லிசை கச்சேரியை நடத்தி, இளம் வயதில் பெரும் சாதனைப் படைத்துள்ளார்.

வில்லுப்பாட்டு மட்டுமல்லாமல் சுவாரசியமான சில குட்டி கதைகளைச் சொல்லியும், மாதவி பக்தர்களை தன் வசம் இழுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதன் காரணமாக மாதவி வில்லுப்பாட்டு என்றாலே திருவிழாவுக்கே செல்லாதவர்கள்கூட, அன்று கோயிலில் குடியிருப்பார்கள். மேலும் செல்லும் இடங்களில் எல்லாம் மாதவியின் ரசிகர்கள் செல்ஃபி எடுப்பதற்கும் மறப்பதில்லை.

வில்லுப்பாட்டு மாதவி தனது ரசிகர்களுடன் செல்பி
வில்லுப்பாட்டு மாதவி தனது ரசிகர்களுடன் செல்ஃபி

தவறாக எண்ணியவர்களுக்கு மாதவியின் பதிலடி: தனது இளம் வயதிலேயே வில்லிசைக் கலையில் புகழ் பெற்று விளங்கும் மாதவிக்கு வில்லுப்பாட்டு கலையை அழிய விடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது.

இதுகுறித்து மாதவி ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், ''பாட்டி வீட்டிற்குச் செல்லும்போது கோயில் திருவிழாவில் வில்லுப்பாட்டை ரசித்துக் கேட்பேன். தாத்தா சாமி ஆடுவார். மாமாவுக்கு வில்லுப்பாட்டு மீது அதிக ஆர்வம் உண்டு. எனவே, நமது குடும்பத்தில் யாராவது வில்லுப்பாட்டு பாட வேண்டும் என்று விரும்பினார். எனது சகோதரிகள் இதெல்லாம் தேவையா என்று சொன்னார்கள். ஆனால், எனக்கு வில்லுப்பாட்டு கற்க ஆசை இருந்தது. அதைத்தொடர்ந்து முதன்முதலாக இசக்கிப் புலவரிடம் வில்லுப்பாட்டு கற்றேன்.

அதனையடுத்து வல்லம் மாரியம்மாள் என்ற மூத்த வில்லிசை கலைஞர் வீட்டில் 9 நாட்கள் தங்கி இருந்து வில்லுப்பாட்டை முறைப்படி கற்றுக்கொண்டேன். முதல் அரங்கேற்றத்தை சொந்த ஊரில் நிகழ்த்தியபோது பலர் பெருமையாக பார்த்தனர். சிலர் விமர்சனம் செய்தார்கள்.

'இந்த பொண்ணு எல்லாம் எப்படி படிப்பாள்? தவறான வழியில் சென்று விடுவாள்..' என்றெல்லாம் பேசினார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து பயணித்தேன். 9ஆம் வகுப்பு படிக்கும்போது 14 வயது இருக்கும். படித்துக்கொண்டிருக்கும் போதே வில்லுப்பாட்டு படிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். 10ஆம் வகுப்புக்குச் செல்லவில்லை.

தொடர்ந்து படிப்பை நிறுத்திவிட்டு வில்லுப்பாட்டில் பயணித்து வருகிறேன். கரோனா வந்தபோது கஷ்டத்தை சந்தித்தோம். 14 வயதாக இருந்தாலும் கூட ஒரு விஷயத்தை ஆசையோடு செய்தால் எளிதில் அது சாத்தியமாகும். ஆசைப்படுவதுதான் முக்கியம். சமூகத்தில் நல்லதை சொல்பவர்களும் இருப்பார்கள், கெட்டதை சொல்பவர்களும் இருப்பார்கள்.

அழிந்து வரும் கலையை சின்ன பொண்ணு கையில் எடுத்திருப்பதாகப் பலர் பாராட்டினார்கள். வீட்டில் முழு ஆதரவு கொடுத்தார்கள். திருவிழாக்களுக்குப் பாட செல்லும்போது பலர் என்னைப் பார்த்து ‘சின்னப் பெண்ணாக இருக்கிறாள். இவள் எப்படி வில்லு படிப்பாள்?’ என்று ஊர் நாட்டாமையிடம் கேலி செய்வார்கள். அவர்களை எனது திறமையால் வாய் அடைக்கச் செய்தேன்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னை கேலி செய்தவர்களே, என்னிடம் வந்து பணம் பரிசளித்து பாராட்டுவார்கள். தற்போதைய இளைஞர்கள் மருத்துவராகவும் இன்ஜினியராகவும் படிக்கின்றனர். ஆனால், இந்த கிராமிய கலையிலும் அவர்களுக்கு ஆர்வம் வர வேண்டும். என்னைப் பார்த்து பிறரும் இந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். எனது குடும்பத்தில் யாரும் வில்லுப்பாட்டு படிக்கவில்லை. நான்தான் எனது குடும்பத்தில் முதல் வில்லிசை கலைஞர். இன்னும் அதிக அனுபவங்களைப் பெற்ற பிறகு, பிறருக்கு கற்றுக் கொடுக்க ஆசைப்படுகிறேன்'' என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் 'பவாரியா கொள்ளையர்கள்' ஆதிக்கமா? - சிறப்பு தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.