ETV Bharat / state

நெல்லையில் பங்குனி உத்திரத் திருவிழா : அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - Tirunelveli

நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பங்குனி உத்திரத் திருவிழா கலைகட்டியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நெல்லை பேருந்து நிலையத்தில் பகதர்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லையில் பங்குனி உத்திரத் திருவிழா : அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

author img

By

Published : Mar 18, 2022, 6:07 PM IST

நெல்லை: தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் குலதெய்வ கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடுவார்கள். அதன்படி இந்தாண்டு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு இன்று(மார்ச் 18) நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோயில்களில் காலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நெல்லையில் பங்குனி உத்திரத் திருவிழா : அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பல்வேறு சாஸ்தா கோயில்களில் கூடிய பக்தர்கள்

இந்நன்னாளில் குலதெய்வம் கோயிலான சாஸ்தா கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை சாஸ்தாவிற்கு மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

இரவு 12 மணிக்குப்பிறகு சாஸ்தாவின் காவல் தெய்வங்களான கருப்பசாமி, சுடலை மாடசாமி, தளவாய் மாடசாமி, சங்கிலி மாடசாமி, கரையடி மாடசாமி, முண்டசாமி, சப்பாணி மாடசாமி, தூண்டில் மாடசாமி, வன்னியர், வன்னிய தலைவி, பேச்சியம்மாள் பிரம்மசக்தி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் படைகளும், பூஜையும், ஆடு கோழி பலியிடுவதும் நடக்கும்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர். அந்த வகையில் பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் ஆயிரங்கால் சாஸ்தா கோயிலில் இன்று(மார்ச் 18) காலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

அலைமோதிய நெல்லைப் பேருந்து நிலையம்

அப்போது அவர்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்தனர். இந்த கோயிலில் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதேபோல் பிராஞ்சேரி கரையடி மாடசாமி திருக்கோயில் உள்ளிட்டப் பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

பங்குனித் திருவிழாவையொட்டி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று ஒட்டுமொத்தமாக குலதெய்வ கோயில்களுக்குப் படையெடுத்துள்ளதால் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதையும் படிங்க:தனியார் பள்ளிகளுக்கும் இலவசப் புத்தகம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.