ETV Bharat / state

இளைஞர் படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்!

நெல்லை: தச்சநல்லுார் அருகே இளைஞர் அசோக் என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.

nellai
author img

By

Published : Jun 13, 2019, 10:16 AM IST

நெல்லை மாவட்டம் தச்சநல்லுார் அடுத்த கரையிருப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக்(32). இவர் நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் கரையிருப்பு ரயில்வே கேட் அருகே அவரை படுகொலை செய்தனர். இதனை அறிந்த அசோக்கின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மதுரை-நெல்லை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து நெல்லை மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், காவல் துணை ஆணையர் மாலிக் பெரோஸ்கான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், குற்றவாளிகளை கைது செய்தால்தான் உடலை ஆய்வுக்கு அனுப்பிவைப்போம்; இல்லையெனில் உடலை யாரும் தொடக்கூடாது என உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இளைஞர் படுகொலை- உறவினர்கள் சாலைமறியல்

சுமார் நான்கு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊர்மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் உடல் நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், தச்சநல்லுார் காவல் நிலையத்தினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை அருகே இரவில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை . நெல்லை - மதுரை பைபாஸ் சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு பதட்டம்.

நெல்லை மாவட்டம் நெல்லை தச்சநல்லூர் அடுத்த கரையிருப்பு ரயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்டார் இதனால் நெல்லை- மதுரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது மேலும்.பதட்டமான சூழல் நிலவியது.

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அடுத்த கரையிருப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக் (23) இவர் இன்று இரவு வேலையை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கரையிருப்பு ரயில்வே கேட் அருகே மர்ம கும்பல் அசோக்கை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதனை தொடர்ந்து அசோக்கின் உறவினர்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மதுரை - நெல்லை நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை போலீஸ் கமிஷனர் மாலிக் பெரோஸ்கான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர் அங்கு பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை மேலும் உடலை போலீசார் கைப்பற்ற சென்றனர் அப்போது பொதுமக்கள் குற்றவாளியை கைது செய்தால்தான் நாங்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்போம் இல்லை என்றால் இந்த உடலை யாரும் தொடக் கூடாது என தெரிவித்தனர் இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது இதனால் நெல்லை- மதுரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம். செய்யப்பட்டது மேலும் அந்தப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

இதன் பிறகு சுமார் நான்கு மணிநேரம் காவல்துறை ஊர் மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டத்தை கைவிட்டனர் இதனை தொடர்ந்து உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.