ETV Bharat / state

இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை: முடுக்கிவிடப்பட்ட சீரமைப்பு பணிகள் - tirunelveli rain recent news

திருநெல்வேலி: மழை குறைந்து மீண்டும் நெல்லை இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது.

nellai come back to normal
இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை
author img

By

Published : Jan 16, 2021, 6:39 PM IST

Updated : Jan 16, 2021, 7:19 PM IST

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

அணைகளில் உபரி நீர் வெளியேற்றம்

கிட்டத்தட்ட 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்துவருகிறது. இதனால் ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து 5740 கன அடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 1995 கன அடியும், தென்காசி மாவட்டம் கடனா அணையிலிருந்து 512 கனஅடியும், ராமா நதியிலிருந்து 140 கண்ணாடியும் என மொத்தம் 8347 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆறு மெல்ல அதன் இயல்புநிலைக்கு திரும்பி வருவதால் பொதுமக்கள் ஆற்றின் கரையோரத்தில் குளிக்கவும், துணி துவைக்கவும் தொடங்கியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதங்கள் நேரலாம் என்பதால் காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்து அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மீண்டும் தொடங்கிய மழை

இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளது. கடும் வெள்ளப் பெருக்கின்போது கருப்பந்துறை வழியாக நெல்லை, டவுன், மேலப்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஆற்று பாலத்தின் மேல் வெள்ளநீர் சென்றதால் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் பாலத்தின் இருபுறங்களிலும் மூடி சீல் வைத்தனர்.

இன்று காலை (ஜன.16) அங்கு தண்ணீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து பாலத்தில் நிறைந்திருக்கும் அமலை செடிகள் நீக்கம் செய்யப்பட்டு போக்குவரத்தை மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மழை லேசாக பெய்ய தொடங்கியதை அடுத்து பாலம் மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை

மழைப்பொழிவு விவரம்

மாவட்டத்தில் சற்று மழை ஓய்ந்து இருந்தாலும் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் பகுதியில் 15 மில்லி மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 6 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு பகுதியில் 14.2 மில்லி மீட்டரும், அம்பாசமுத்திரம் பகுதியில் 12.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Last Updated : Jan 16, 2021, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.