ETV Bharat / state

நாங்குநேரில் வெற்றி யாருக்கு? இறுதிக்கட்ட பரப்புரை நிறைவு

திருநெல்வேலி: நாளை (அக். 21ஆம் தேதி) நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைந்தது. முதலமைச்சரில் தொடங்கி எதிர்க்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரின் முகத்தையும் பார்த்துவிட்டது நாங்குநேரி தொகுதி.

Nanguneri byelection
author img

By

Published : Oct 20, 2019, 9:20 PM IST

சரியாக கூறுவதென்றால் கடந்த 3ஆம் தேதி முதல் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிணைப்பாளர் சீமான், நடிகர் சரத்குமார், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன், நல்லகண்ணு, தா. பாண்டியன் உள்ளிட்ட பல தலைவர்கள் கடந்த 15 தினங்களுக்கு மேலாக நாங்குநேரி தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நாங்குநேரி தொகுதியில் கூடாரமிட்டு கட்சி பணிகளை மேற்கொண்டனர்.

நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு கட்சிகளுமே தங்களது வேட்பாளரின் பெருமைகளை முன்நிறுத்தியும், எதிர் வேட்பாளரின் குறைகளை கூறியும் பரப்புரையை மேற்கொண்டனர். இதனை யடுத்து அதிமுக தங்களது ஆட்சியின் பெருமையையும், ஸ்டாலினின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளையுமே அனைத்து பரப்புரைகளிலும் தொடர்ச்சியாக முன்வைத்தது.

மேலும் தொகுதி மக்களின் தேவைகளை தாண்டி அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இரண்டு ஆண்டு எட்டு மாத ஆட்சி சாதனையே அதிகமாக முன்நிறுத்தப்பட்டன. அதிமுக அமைச்சர்கள் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து தொகுதியில் கூடாரமிட்டு அடிமட்ட தொண்டன் வரை தங்களது பணி சென்றடைவதை மிக எச்சரிக்கையாக கவனித்தனர். இந்த யுக்தி அதிமுகவின் அடிமட்ட தொண்டனை கூட சுறுசுறுப்பு அடையச்செய்தது என்பதை மறுக்கமுடியாத ஒன்று.

இதன் மறுபக்கம் திமுக, எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியின் குறைகளையும், அவர்களின் குற்றங்களையும் கூறுவதை தங்கள் முதல் பணியாக மேற்கொண்டனர். எதிர்க்கட்சியாக கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவிற்கு வேறு வழியில்லாத நிலையில் அதிமுக அமைச்சர்களின் ஊழல், மோசடிகள் குறித்தே திமுகவின் பரபரப்புகள் இருந்தன.

பரபரப்பின் போது, ஸ்டாலின், வைகோ போன்ற பெருந்தலைவர்களும் உளறிய சம்பவங்களும் அரங்கேறின. எது எப்படி இருப்பினும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இந்த தொகுதியில் பெரிதாக நம்பியிருப்பது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் செல்வாக்கைதான் என்பது இவர்களின் பரப்புரையின் போது நன்றாக வெளிப்பட்டது. அதனை உடைப்பதிலேயே அதிமுக அதிகம் கவனம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டு பிரதான கட்சிகளும் இரண்டு தேர்தலுக்கு முன்பு கொடுத்த அதே வாக்குறுதிகளையே மீண்டும் மீண்டும் மக்களுக்கு அளித்தனர். இதிலிருந்தே நாங்குநேரி தொகுதியின் நிலை என்ன என்பது நன்றாக தெரியவருகின்றது. இதனை அடுத்து பெரிதாக பார்க்கப்படுவது நாம் தமிழர் கட்சி. தொடக்கத்தில் வழக்கமான திராவிட கட்சிகளின் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதன் செயல்பாடுகள் குறித்தே தங்களது பரப்பரைகள் இருந்தன.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரையினை ராஜிவ்காந்தி சர்ச்சைக்கு முன் மற்றும் பின்னாக பிரிக்கும் அளவிற்கு எழுந்தது அந்த சர்ச்சை. சீமானின் ராஜிவ்காந்தி கொலை சம்பவம் குறித்த கருத்து பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அனைத்து ஊடகங்களிலும் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் அவரது கட்சி குறித்து பேசவைத்தது என்பது நிதர்சனமான உண்மை.

நாங்குநேரி தொகுதியினை பொறுத்தவரை காங்கிரஸ் தங்களுக்கென்று ஒரு அசைக்க முடியாத வாக்கு வங்கியினை வைத்துள்ளது. அதனை எதிர்த்து தான் அதிமுக தனது கடுமையான போராட்டத்தை முன்வைகின்றது. அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில் அந்த கட்சியின் வாக்குகளை அதிமுக பெற முடியாது.

இது அதிமுகவிற்கு மேலும் ஒரு பின்னடைவு, இருப்பினும் அதிமுக அதன் வேட்பாளரை தேர்வு செய்வது முதல் அனைத்திலும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செயல்பட்டு வருகிறது. ஏனெனில் தேர்தலுக்கு முன்பே அந்தத் தொகுதி திமுக கூட்டணியின் கைகளில் இருந்தது. இவை ஒருபுறம் இருக்க தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதும், பறக்கும் படையினர் சில இடங்களில் அவர்களை பிடிப்பதும் ஒருபுறம் தீவிரமாக நடந்தும் வருகின்றது. மொத்தத்தில் காங்கிரஸ் வென்ற தொகுதியான நாங்குநேரியில் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறும் கட்சி பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

இதையும் படிங்க: 'சீனி சக்கரை சித்தப்பா, பேப்பரில் எழுதி நக்கப்பா!' - காங்கிரசை பங்கம் செய்த ராஜேந்திர பாலாஜி

Intro:நாங்குநேரியில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம். கட்சிகளின் வாக்குறுதிகள் என்ன? எதனை முன்நிறுத்துகின்றனர் பிரதான கட்சிகள்.Body:நாங்குநேரியில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம். கட்சிகளின் வாக்குறுதிகள் என்ன? எதனை முன்நிறுத்துகின்றனர் பிரதான கட்சிகள்.

நாளை நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்தது. முதலமைச்சரில் தொடங்கி எதிர்க்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரின் முகத்தையும் பார்த்துவிட்டது நாங்குநேரி தொகுதி.

சரியாக கூறுவதென்றால் கடந்த 3ம் தேதி முதல் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் , சரத்குமார், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன், நல்லகண்ணு, தா. பாண்டியன் உள்ளிட்ட பல தலைவர்கள் கடந்த 15 தினங்களுக்கு மேலாக நாங்குநேரி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நாங்குநேரி தொகுதியில் கூடாரமிட்டு கட்சி பணிகளை மேற்கொண்டனர்.

நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு கட்சிகளுமே தங்களது வேட்பாளரின் பெருமைகளை முன்நிறுத்தியும் எதிர் வேட்பாளரின் குறைகளை கூறியும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர் இதனை அடுத்து அதிமுக தங்களது ஆட்சியின் பெருமையையும் ஸ்டாலினின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளையுமே அனைத்து பிரச்சாரங்களிலும் தொடர்ச்சியாக முன்வைத்தது. முதல்வரின் தொடங்கி அதிமுக கூட்டணி கட்சிகள், நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் உட்பட ஸ்டாலினை வசைபாடுவதை மிக சரியாக பின்பற்றினர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் பேராசை காரணமாகவே இந்த இடைத்தேர்தல் மக்களுக்கு திணிக்கப்பட்டது என்ற முழக்கத்தை அனைத்து பிரச்சாரங்களிலும் தவறாமல் முன்வைத்தனர். தொகுதி மக்களின் தேவைகளை தாண்டி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் இரண்டு ஆண்டு எட்டு மாத ஆட்சி சாதனையே அதிகமாக முன்நிறுத்தப்பட்டன. அதிமுக அமைச்சர்கள் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து இந்த தொகுதியில் கூடாரமிட்டு அடிமட்ட தொண்டன் வரை தங்களது பணி சென்றடைவதை மிக எச்சரிக்கையாக கவனித்தனர். இந்த யுக்தி அதிமுகவின் அடிமட்ட தொண்டனை கூட சுறுசுறுப்பு அடையச்செய்தது மறுக்கமுடியாத ஒன்று.

இதன் மறுபக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஆட்சியின் குறைகளையும் அதன் குற்றங்களையும் கூறுவதை தங்கள் முதல் பணியாக மேற்கொண்டனர். எதிர்க்கட்சியாக கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவிற்கு வேறு வழியில்லாத நிலையில் அதிமுக மற்றும் அதன் அமைச்சர்களின் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்தே திமுகவின் பிரச்சாரங்கள் இருந்தன. ஸ்டாலின், வைகோ போன்ற பெருந்தலைவர்களும் தேர்தல் பரப்புரையின் போது உளறிய சம்பவங்களும் அரங்கேறின. எது எப்படி இருப்பினும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இந்த தொகுதியில் பெரிதாக நம்பியிருப்பது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் செல்வாக்கைதான் என்பது இவர்களின் பிரச்சாரத்தின் போது நன்றாக வெளிப்பட்டது. அதனை உடைப்பதிலேயே அதிமுக அதிகம் கவனம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டு பிரதான கட்சிகளும் இரண்டு தேர்தலுக்கு முன்பு கொடுத்த அதே வாக்குறுதிகளையே மீண்டும் மீண்டும் மக்களுக்கு அளித்தனர். இதிலிருந்தே நாங்குநேரி தொகுதியின் நிலை என்ன என்பது நன்றாக தெரிய வருகின்றது. இதனை அடுத்து பெரிதாக பார்க்கப்படுவது நாம் தமிழர் கட்சி, தொடக்கத்தில் வழக்கமான திராவிட கட்சிகளின் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதன் செயல்பாடுகள் குறித்தே தங்களது பிரச்சாரங்கள் இருந்தன. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரையினை ராஜிவ்காந்தி சர்ச்சைக்கு முன் மற்றும் பின்னாக பிரிக்கும் அளவிற்கு எழுந்தது அந்த சர்ச்சை. சீமானின் ராஜிவ்காந்தி கொலை சம்பவம் குறித்த கருத்து பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அனைத்து ஊடகங்களிலும் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் அவரது கட்சி குறித்து பேசவைத்தது என்பது நிதர்சனமான உண்மை.

நாங்குநேரி தொகுதியினை பொறுத்தவரை காங்கிரஸ் தங்களுக்கென்று ஒரு அசைக்க முடியாத வாக்கு வங்கியினை வைத்துள்ளது. அதனை எதிர்த்து தான் அதிமுக தனது கடுமையான போராட்டத்தை முன்வைகின்றது. அதிமுக கூட்டணியாக இருந்த புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில் அந்த கட்சியின் வாக்குகளை பெற முடியாதது அதிமுகவிற்கு மேலும் ஒரு பின்னடைவு இருப்பினும் அதிமுக அதன் வேட்பாளரை தேர்வு செய்வது முதல் அனைத்திலும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செயல்பட்டு வருகிறது ஏனெனில் தேர்தலுக்கு முன்பே அந்த தொகுதி திமுக கூட்டணியின் கைகளில் இருந்தது.

இவை ஒரு புறம் இருக்க தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதும் பறக்கும் படையினர் சில இடங்களில் அவர்களை பிடிப்பதும் ஒரு புறம் தீவிரமாக நடந்தும் வருகின்றது. யார் அதிகம் செலவு செய்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் காங்கிரஸ் வென்ற தொகுதியான நாங்குநேரியில் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறும் கட்சி பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.