ETV Bharat / state

வாக்காளர்களுக்கு வாரி இறைக்க பல லட்சம் ரூபாய்... நாங்குநேரியில் பரபரப்பு! - நாங்குநேரி தொகுதியில் தேர்தல் அலுவலர்கள் விசாரணை

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பல லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டதையடுத்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நாங்குநேரி தொகுதியில் பல இலட்சம் பணம் பறிமுதல்
author img

By

Published : Oct 18, 2019, 8:15 AM IST

Updated : Oct 18, 2019, 9:54 AM IST

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ஒரு வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி காவல் துறையினருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

நாங்குநேரி தொகுதியில் பல லட்சம் ரூபாய் பறிமுதல்

பின்பு சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி தொகுதி தேர்தல் அலுவலர்களும் பறக்கும் படையினரும் பணத்தைக் கைப்பற்றி இடத்தின் உரிமையாளர் உட்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் திமுக தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் லட்சக்கணக்கில் பணம் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பேசிய தேர்தல் அலுவலர்கள், முதற்கட்ட விசாரணை நிறைவடைந்த பிறகுதான் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது, இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் என்று தெரிவித்தனர். வருகின்ற 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் நாங்குநேரி அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக மாற்றியுள்ளது.

இதையும் படியுங்க: சிதம்பரத்துக்கு காவல் நீட்டிப்பு!

Intro:நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பல லட்சம் ரூபாய் பிடிபட்டது. தேர்தல் அதிகாரிகள் விசாரணை.Body:நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பல லட்சம் ரூபாய் பிடிபட்டது. தேர்தல் அதிகாரிகள் விசாரணை.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி அருகே அம்பலம் என்னும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறத்தில் உள்ள ஒருவீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து பணம் வைத்திருந்த இடத்திற்கு பொதுமக்கள் சென்று பார்த்த போது கட்டு கட்டாக அங்கு பணம் இருந்துள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் பணத்தை மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி காவல்துறையினருக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி தொகுதி தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றி இடத்தின் உரிமையாளர் உட்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லட்சக்கணக்கில் பணம் சிக்கியுள்ளதாகவும் மேலும் இதில் திமுக தரப்பினர் சமந்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்ட விசாரணை நிறைவடைந்த பிறகு தான் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது யார் யாரெல்லாம் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து தெரியவரும் என்று தெரிவித்தனர். வருகின்ற 21ம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு பணம் பிடுப்பட்டுள்ளது நாங்குநேரி அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக மாற்றியுள்ளது.
Conclusion:
Last Updated : Oct 18, 2019, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.