ETV Bharat / state

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்! - வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி, அணுமின் நிலையம் முன்பு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்!

author img

By

Published : May 9, 2020, 7:47 PM IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டுவருகின்றன. மேலும் 3ஆவது, 4ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன. இதில் கட்டுமானப் பணி, பராமரிப்பு பணியில் எல்என்டி நிறுவன ஒப்பந்தம் மூலம் வடமாநிலத் தொழிலாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அணு உலையில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. அணுமின் நிலையத்தில் பணியாற்றிய வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களை ஒப்பந்த நிறுவனம் அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே டெண்டுகள் அமைத்து தங்க வைத்தது. ஆனால் இவர்களுக்கு சரிவர உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து கடந்த 4ஆம் தேதி வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பெயர் விவரங்களை பதிவு செய்து விரைவாக சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்த அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில், ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று காலை மீண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணுமின் நிலைய முகப்பு பகுதியில் கூடி போராட்டத்தல் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஆண்டனிஜெகதா தலைமையிலான காவல் துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லூமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போது தொழிலாளர்கள் ஆத்திரமடைந்து சொந்த ஊருக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்

இதனையடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்த போது தொழிலளர்கள் கம்பால் காவல் துறையினரை தாக்கியுள்ளனர். இதில் காவல் ஆய்வாளர் ஆண்டனிஜெகதாவிற்கும், கல்வீசியதில் காவலர் சக்திவேலுக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...சவுதியிலிருந்து 153 பயணிகள் கேரளா வருகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.