திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபுரத்தை அடுத்த கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மரியசெல்வத்திடம் சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் சீட்டு பணம் முழுமையாக கட்டி முடித்த பிறகும் மரியசெல்வம் உரிய பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மரியசெல்வத்தின் வீட்டிற்கு சென்ற பாலசுப்ரமணியம் சீட்டுப்பணத்தை கேட்டு மன்றாடி உள்ளார். அப்போது மரியசெல்வம் பணம் தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியம் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கே.புரம் காவல் துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (நவ16) உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் மரிய செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலசுப்பிரமணியம் தீக்குளித்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:
திண்டுக்கல்லில் இடத்தகராறால் துப்பாக்கிச் சூடு: தொழிலதிபர் கைது!