அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள அய்யா வழி பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அவதார தினத்தையொட்டி, மார்ச் 2ஆம் தேதி திருச்செந்தூர் அய்யா அவதாரப் பதியிலிருந்து ஒரு வாகன பவனியும், திருவனந்தபுரம் பத்மநாதசுவாமி கோயில் அருகிலிருந்து ஒரு வாகன பவனியும் தொடங்கி அன்றைய தினம் இரவு நாகர்கோவில் நாகராஜா திடலில் உள்ள அய்யா வழி மாநாட்டுத் திடலை வந்தடைகின்றன.
இதையடுத்து, பக்தர்கள் எவ்வித இடர்பாடுகளுமில்லாமல் விழாவில் கலந்துகொள்ள நெல்லை மாவட்டத்திற்கு வரும் மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை வழங்கவேண்டும். அன்றைய தினம் மதுக்கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்கவேண்டும் என அய்யா வைகுண்டசாமி தலைமைபதி நிர்வாகி பூஜிதகுரு பால ஜனாதிபதி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அய்யா வைகுண்டர் அவதார விழா: அரசு விடுமுறை அளிக்க வேண்டுகோள்