ETV Bharat / state

அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

திருநெல்வேலி: அரசு மருத்துவமனைக்கு 36 லட்சம் ரூபாய் மதிப்பில் 55 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மருத்துவ முன்னாள் மாணவர்கள் இன்று (ஜூன் 1) வழங்கினர்.

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முன்னாள் மருத்துவர்கள்

author img

By

Published : Jun 1, 2021, 6:26 PM IST

கரோனா தொற்றால் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மருத்துவமனைகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றன. நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவியது.

அந்தச் சமயத்தில் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிகமானோர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்குச் சென்றதால் ஆக்ஸிஜன் நுகர்வு அதிகரித்தது.

தனியார் அமைப்புகள்

இதையடுத்து, மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனம் தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து ஆக்ஸிஜனைப் பெற்று மாவட்ட நிர்வாகம் நிலைமையைச் சமாளித்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு உதவிகரமாக நெல்லையில் உள்ள பல்வேறு தனியார் அமைப்புகள், தொழிலதிபர்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி வந்தனர்.

தனியார் அமைப்புகள் வழங்கிவரும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தேவையைச் சமாளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்திருந்தார்.

55 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்

தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், பலர் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிவரும் சூழ்நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்ற மருத்துவ முன்னாள் மாணவர்கள் இன்று (ஜூன் 1) 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான 55 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.

இரண்டாம் கட்ட அலையின் இக்கட்டான நேரத்தில் தனியார் அமைப்புகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக நின்று ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கிவரும் நிலையில் மருத்துவ முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கிய நிகழ்வு பாராட்டைப் பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.