ETV Bharat / state

"ராமதாஸுக்கு வேற வேல இல்ல" - அதானி குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் ரியாக்ஷன்! - TN CM MK STALIN

அதானி விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் கேள்வி எழுப்புகிறாரே என்ற கேள்விக்கு, "ராமதாஸ் அவர்களுக்கு வேறு வேலை இல்லாததால் தினந்தோறும் ஏதேனும் அறிக்கைவிட்டு கொண்டே இருப்பார்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், (Credits - RAMA DOSS AND MK STALIN X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 5:40 PM IST

சென்னை : தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமைய பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனம் தொடர்பான நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப்பயிற்சி, இயன்முறை, செயல்முறை மற்றும் உளவியல் ஆகிய ஆறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதோடு, இச்சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்மையம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இம்மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இம்மையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்படுமாயின், அங்கு வைக்கப்பட்டுள்ள பட்சரை (Buzzer) பயன்படுத்தலாம்.

தரமான கட்டட வடிவமைப்பினை ஏற்படுத்தி, மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட Harmonized Guidelines 2021–ன்கீழ் ஒரு புதிய பரிமாணத்தை அடைய இம்மையம் ரூ.3.08 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு முன்னெடுப்பாக இம்மைய வளாகத்தில் ஒரு மாற்றுத்திறனாளியால் நடத்தப்படும் ஆவின் பாலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியும், ஸ்ரீராமசரண் அறக்கட்டளையும் இணைந்து 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், ரூ.69 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சோழிங்கநல்லூர், எழில் நகரில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையர் பிரிவுக் கட்டடத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி கலந்துரையாடினார்.

இதையும் படிங்க : “ஸ்கூல் பீஸ் கட்ட பணமில்ல”.. தனியார் பள்ளியிடமிருந்து மகனின் டிசியை பெற்ற தர கலெக்டரிடம் தந்தை மனு!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், "பெருமழையை எதிர்பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு, பெருமழையை எதிர்பார்க்கிறோம், எதிர்பார்க்கவில்லை என்பது வேறு. நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எந்த விவகாரத்தை எழுப்ப உள்ளீர்கள் என்ற கேள்விக்கு, ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து என்னென்ன பேச வேண்டும் என்பதை தீர்மானமாக போடப்பட்டு அவர்களிடம் கொடுத்துள்ளோம். அதை வலியுறுத்தி அதன் அடிப்படையில் பேசுவார்கள்.

அதானி விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ஏற்கனவே துறை சார்ந்த அமைச்சரே அதுகுறித்து பேசிவிட்டார். அதை நீங்கள் ட்விஸ்ட் பன்னிட்டு இருக்க வேண்டாம். அதானி விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் கேள்வி எழுப்புகிறாரே என்ற கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு வேறு வேலை இல்லாததால் தினந்தோறும் ஏதேனும் அறிக்கைவிட்டு கொண்டே இருப்பார். அதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.