ETV Bharat / state

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் தராத மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்! - MANMOHAN SINGH

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்கும் வகையில் இடம் அளிக்காத மத்திய அரசின் செயல் அவரது மகத்தான பங்களிப்புகளை பொதுமக்களின் நினைவில் இருந்து அழிக்கும் முயற்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி -கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 14 hours ago

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்கும் வகையில் அவரை தகனம் செய்ய இடம் அளிக்காத மத்திய அரசின் செயல் என்பது அவரது மகத்தான பங்களிப்புகளை பொதுமக்களின் நினைவில் இருந்து அழிக்கும் முயற்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமருக்கு கடிதம்: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்கும் வகையில் அவரது உடலை தகனம் செய்வதற்கு இடம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.

காங்கிரஸ் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதில் டெல்லியில் உள்ள பெரிய தகன மயானமான நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங்கை தகனம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த மயானம் யமுனை ந திக்கரையில் அமைந்துள்ளது. டெல்லி செங்கோட்டையின் பின்னால் உள்ளது.

பஞ்சாப் தலைவர்கள் அதிருப்தி: மத்திய அரசு பிடிவாத போக்கை கைவிடாத நிலையில் மன்மோகன் சிங் உடல் நிகம்போத் காட் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டு பஞ்சாப் மாநிலத்தில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல், மரியாதைக்குரிய மன்மோகன் சிங் உடல் நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் நம்ப முடியாத தாகவும் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு: மேலும் இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், “மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்கும் வகையிலான இடத்தில் அவர் தகனம் செய்யப்பட வேண்டும். அவரது உலகளாவிய அந்தஸ்து, சிறந்த சாதனைகள், பல தசாப்தங்களாக அவர் இந்த தேசத்திற்கு சிறந்த சேவை செய்தமைக்கு மரியாதை செய்யும் வகையில் ஏன் மத்திய அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்தது என்பதை நமது நாட்டின் மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமரை வேண்டுமென்றே அவமதிக்கும் செயல் என்பதைத் தவிர வேறில்லை,”எனக் கூறியிருந்தார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்: இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் இறுதிச் சடங்குகளை அவரது நினைவிடம் அமைப்பதற்கு ஏற்ற இடத்தில் செய்யும் உரிமையை பாஜக அரசு மறுத்திருக்கிறது. பாஜக அரசின் முடிவு என்பது மன்மோகன் சிங்கின் உயர்ந்த மரபுக்கும் சீக்கிய சமூகத்திற்கும் நேரடி அவமானமாகும். குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்து, இரண்டு முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்ய அனுமதிப்பது ஆணவம் போக்கு. மேலும் பாரபட்சமானது. மன்மோகன் சிங்கின் மகத்தான பங்களிப்புகளை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க வேண்டுமென்றே முயற்சிப்பதைக் காட்டுகிறது.

மன்மோகன்சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியது மற்றும் லட்சக் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டது. அந்தஸ்து மிக்க ஒரு அரசியல்வாதியை அவமதிப்பது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். சிறந்த தலைவர்களை அவமதிப்பது என்ற கறை ஒருபோதும் வரலாற்றிலிருந்து மறையாது,” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.