திருநெல்வேலி: பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அங்குள்ள சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையிலும் பொருளாதார மேம்பாட்டுக்கும் சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இங்கு, மொத்தமாக 2000-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர்.
இந்தநிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள நூலகத்தில் சிறைவாசிகளின் மறுவாழ்விற்கு உதவும் வகையில் பல நூறு புத்தகங்கள் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் வசதிக்காகவும், சிறை வாழ்க்கையை பயனுள்ள விதத்தில் மேம்படுத்தும் விதமாகவும், அவர்களின் எண்ண ஓட்டத்தை சீர்படுத்தும் விதமாகவும் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய அதிக புத்தகங்கள் கொண்ட நூலகமாக அந்த நூலகத்தை அமைக்க சிறை நிர்வாகம் முடிவு செய்து அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
சிறைவாசிகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை வாழ்வில் நல்வழிப்படுத்தும் வகையில் புத்தக தானம் பெறும் முயற்சி தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நடந்து வருகிறது. அதுபோல பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் வளாகத்தில் புத்தகதானம் பெறும் மையத்தினை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் திறந்து வைத்துள்ளனர்.
இந்த மையத்திற்கு சிறந்த முதல் நாளே மில்லத் இஸ்மாயில் என்பவர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தனது 18 வயதில் சிறையில் அடைக்கப்பட்டார் சிறைச்சாலை வளாகத்திலேயே தனது பட்டப்படிப்பை தொடங்கி எம் ஏ எம் பில் வரை படித்த சிறைவாசியாக இருந்தவர் உட்பட பல்வேறு தரப்பினரும் ஏராளமான புத்தகங்களை இந்த மையத்திற்கு வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாதம் ரூ.30 ஆயிரம் செலவு.. 'பாகுபலி' காளையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்!